மட் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்
புது வரலாறு படைக்க வாழ்த்திடுவோம்
இங்கு கற்றிடும் மாணவ மணிகள் - எல்லாம்
சீர் பெற்று வாழ வாழ்த்திடுவோம்
சீர் பெற்று வாழ வாழ்த்திடுவோம்
வாழ்க வாழ்க
விஞ்ஞானம் கணிதம் தமிழ் சமயம்
விருப்புடன் நாம் கற்று சிறப்படைவோம்
வரலாறு ஆங்கிலம் தொழினுட்பம்
அனைத்திலும் தேர்ச்சியை நாம் பெறுவாம்
அனைத்திலும் தேர்ச்சியை நாம் பெறுவாம்
வாழ்க வாழ்க
கற்றலும் அறிவைக் கற்பிக்கும்
எங்கள் ஆசான் அவரடி நாம் தொழுவோம்
கண்ணியமாக சேவை செய்யும்
அதிபரையும் நாம் போற்றிடுவோம்
அதிபரையும் நாம் போற்றிடுவோம்
வாழ்க வாழ்க
வாழ்வின் சவால்களை எதிர் கொள்வோம்
வழமுடன் வாழ வழி சமைப்போம்
வாழ்க்கை விழுமியம் அனைத்தையுமே - எங்கள்
நெஞ்சினில் பதித்து நாம் உயர்வோம்.
நெஞ்சினில் பதித்து நாம் உயர்வோம்.
வாழ்க வாழ்க.





