ஸ்தாபகர்

திரு.தியாகப்பன்
இயற்கை எழில் கொஞ்சும் மட்டுமா நகரின் கிழக்குத் திசையில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் அருகே அமைந்திருப்பது ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயமாகும். இது 1957.10.01 ம் திகதி ஆலமர நிழலின் பால் திரு.தியாகப்பன் அவர்கள் அதிபராகக் கொண்டு 9 சிறார்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒரு கொட்டிலின் கீழ் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில் 1959ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கௌரவ இராஜதுரை அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.





