பாடசாலையின் அறிமுகம் மற்றும் பின்னணி
கிழக்கிலங்கையின் மீனினம் பாட்டிசைக்கும் மட்டக்களப்பில் புனிதத் தீர்த்தக்கரை கொண்டமைந்த மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் அருகே அறிவொளி பரப்பும் நிலையமாக மட்டக்களப்பு நகரக்கு தெற்கே அமைந்துள்ள மாமாங்கம் என்னும் இடத்தில் மட்/ ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையாகும். இங்கு சீலாமுனை, கூழாவடி, மாமாங்கம், குமரரபுரம், புன்னைச்சோலை, கருவேப்பங்கேணி போன்ற சிறிய பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர். இங்கு தமிழர் பறங்கியருடன்; ஒரு சில முஸ்லீம் மாணவர்களும் இருக்கின்றனர். இங்கு சமய ரீதியாக இந்து, கிறிஸ்தவ மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் அதாவது 95% மாணவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்பதுடன் பெரும்பாலனவர்களின் பெற்றோர்கள் நாளாந்தம் கூலி தொழில் புரிபவர்கள். இதன் காராணமாக தாய் தந்தை வெளிநாடு செல்ல மாணவர்கள் பாதுகாவலருடன் (அம்மம்மா, அப்பப்பா, மாமிமார், சித்திமார்) தங்கி இருக்கின்றார்கள். பொருளாதார நிலை காரணமாக தொழிலுக்கு உதவிபுரியும் மாணவர்களாகவும் பல மாணவர்கள் இருக்கும் ஆரோக்கியமற்ற குடும்பப் பின்னணிகளைக் கொண்டது எமது பாடசாலைச் சமூகம். இங்கு பெரும்பாலான ஆசிரியர்கள் பெண்கள். ஆசிரியர்கள் பாற்றாக்குறை இல்லை. ஆனால் மாணவர்கள் தொகை குறைவால் தெரிவு பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் இல்லை.





